மைத்திரி - மகிந்த சந்திப்பில் நடந்தது என்ன? தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசத் திட்டம்?

Report Print Ajith Ajith in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் புதிய கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாராந்த ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் வகையில் இந்தக் கூட்டணியை அமைப்பது குறித்தும், அந்த அரசாங்கத்தின் பிரதமராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக பொறுப்பேற்கவுள்ள மகிந்த ராஜபக்சவை நியமிப்பதற்கான யோசனையும் இந்த சந்திப்பின்போது பேசப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதி வெளிநாட்டு விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும் இரண்டு வாரங்களில் மீண்டும் சந்திக்க இருவரும் இணங்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்கும்போது தற்போது கூட்டாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் இணையவுள்ளனர்.

அத்துடன், இடைக்கால அரசாங்கத்தில் இணைந்துக்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஜே.வி.பிக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது.

இந்தக் கட்சிகள் அழைப்பை ஏற்றுக்கொள்ளாவிட்டால், ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்து 21 பேரை இடைக்கால அரசாங்கத்துக்குள் உள்ளீர்க்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers