மைத்திரி - மகிந்த இரகசிய சந்திப்பு? இரகசியங்கள் பலதை வெளியிட்ட மகிந்த

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சந்திப்பு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க வீட்டில் இடம்பெற்றுள்ளதாகவும், இதில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் கலந்துகொண்டிருந்ததாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது பல விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளதாவும், குறிப்பாக, ஜனாதிபதியையும், மகிந்த ராஜபக்ச மற்று அவரது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை குறித்து நீண்ட நேரம் பேசப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த படுகொலை சதித்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிந்திராத பல முக்கியமான இரகசிய தகவல்களை மகிந்த ராஜபக்ச வெளிப்படுத்தியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெளியேற வேண்டும் என அண்மை காலமாக பல தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

சமகால அரசாங்கத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் மோதல நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers