மன்னாரில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு

Report Print Ashik in அரசியல்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகம் இன்று உப்புக்குளம் பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகத்தை பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் வைபவ ரீதியாக திறந்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் அமைப்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வின் பின்னர் மக்கள் சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது. இதன்போது மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளை சேர்ந்த மக்கள் பிரதியமைச்சரிடம் தமது பிரச்சினைகளை முன்வைத்துள்ளனர்.


Latest Offers