மைத்திரி - மகிந்த பேச்சு நடத்த எனது உதவி தேவையில்லை: எஸ்.பி

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இடையில் பேச்சுவார்த்தை நடத்த தனது உதவி தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி, ஜனாதிபதியும் தேவையான சந்தர்ப்பங்களில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கவின் வீட்டில் நடைபெற்றதாக வாராந்த பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகும் வரை கூட்டு எதிர்க்கட்சியின் ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு கிடைக்காது என முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Latest Offers