ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் கடற்படை முகாமாக மாற்ற முடியாது: சாகல ரத்நாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

சீனாவுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்படிக்கை ஒரு வர்த்தக உடன்படிக்கை எனவும், பாதுகாப்பு தொடர்பான உடன்படிக்கையை சீனாவுடன் ஏற்படுத்திக்கொள்ளவில்லை, இதனால் அச்சப்பட தேவையில்லை எனவும் அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் விரைவில் சீனாவின் கடற்படை முகாமாக மாறும் எனவும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் சீனா அழுத்தங்களை கொடுத்தாகவும் அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ் கூறியிருந்தமை தொடர்பில் மொரவகந்த பிரதேசத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடு தாங்க முடியாத கடன் சுமைக்கு மத்தியில், அந்த சுமையை மக்கள் மீது சுமத்தி விட்டு கடந்த அரசாங்கம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணித்தது.

துறைமுகத்தில் வருமானம் வராத நிலையில், பெரிய கடன் தவணை செலுத்து அரசாங்கம் என்ற வகையில் அந்த சுமையை மக்கள் மீது திணிக்காது துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு கொடுத்தோம்.

வர்த்தக உடன்படிக்கை மூலமே துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டது. தேசிய பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படும் வகையில் சீனாவுடன் எந்த உடன்படிக்கைகளும் செய்து கொள்ளப்படவில்லை.

இது சம்பந்தமாக நாம் அச்சம் கொள்ள தேவையில்லை. சீனா, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை தனது கடற்படை முகாமாக மாற்ற முடியாது.

அங்கு இலங்கை கடற்படையினரே நிலை நிறுத்தப்படுவர் எனவும் அமைச்சர் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers