மைத்திரியை நம்பி ஏமாற கூட்டு எதிர்க்கட்சி தயாரில்லை

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கூட்டணி அரசாங்கத்தை ஏற்படுத்த கூட்டு எதிர்க்கட்சியினர் தயாரில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

இடைக்கால அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பாக பேசப்பட்டு வரும் விடயம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே ரஞ்சித் சொய்சா இதனை கூறியுள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் இதற்கு தயாராக இல்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க எந்த வகையிலும் தயாரில்லை என்பது கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனது தனிப்பட்ட கருத்து.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது நம்பிக்கை வைக்க கூடிய காலம் கடந்து விட்டது. 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வந்த போது, மூன்று மாதங்களுக்குள் திருத்தங்களை கொண்டு வருவேன், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரான தன்னை நம்பி, 19வது திருத்தச் சட்டத்திற்கு வாக்களிக்குமாறு கூறினார்.

20வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்படும் எனக் கூறினார். மூன்றரை வருடங்கள் கடந்து விட்டது இன்னும் 20வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்படவில்லை. இதுதான் நம்பிக்கை இழப்புக்கு காரணம்.

நிதி மோசடி விசாரணைப் பிரிவு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கொண்டு வந்த போது, இதன் மூலம் பாரதூரமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம், அந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு நாங்கள் ஜனாதிபதியிடம் கோரினோம்.

அதனை தான் காணவும் இல்லை உடனடியாக அதனை இரத்துச் செய்கிறேன் என்ற ஜனாதிபதி எழுந்து சென்றார். அதுவும் அப்படியே இருக்கின்றது. எப்படி ஜனாதிபதி மீது நம்பிக்கை வைக்க முடியும்.

இதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கு வர வேண்டும் என ஜனாதிபதி கூறினார். எமது அரசியல் விஞ்ஞாபனத்தை ஏற்றுக்கொண்டார்.

எனினும் தேர்தல் நடைபெறவிருந்த இறுதி நாட்களில் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி இரவு ஜனாதிபதி ஒரு அறிக்கையை வெளியிட்டார். மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவிக்கு தகுதியற்றவர்.

ரணில் விக்ரமசிங்க திருடன் இல்லை. ரணில் நல்ல மனிதர் அவருடன் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வோம் எனக் கூறினார். இதன் மூலம் தேர்தல் வெற்றியை தடுத்தார்.

கூட்டு எதிர்க்கட்சிக்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தோம். அவரும் கோரிக்கை ஏற்றுக்கொண்டார்.

எனினும் நாங்கள் நாடாளுமன்றத்திற்கு செல்லும் போது ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் தீர்மானம் எடுத்து விட்டனர்.

அண்மையில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமரை காப்பாற்ற நம்பிக்கையில்லாப் பிரேரணை ஜனாதிபதி காட்டிக்கொடுத்தார்.

இவ்வாறு செயற்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பாகவும் அவர் கூறுவதையும் நம்பி இடைக்கால அரசாங்கத்தை கூட்டணி ஆட்சிக்கு கூட்டு எதிர்க்கட்சி இணங்குவது எமக்கு பாரதூரமான பிரச்சினை.

இதனால், தற்போதைய ஜனாதிபதி கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. முடிந்தால் அவர் செயலில் அதனை செய்து காட்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers