வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றம்

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கத்தின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தான் உட்பட தமது அணியினர் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமாயின் அமைச்சரவையில் மாற்றங்களை செய்து தமக்கு அமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என கடந்த காலத்தில் அமைச்சர் பதவியை இழந்த முன்னாள் முக்கிய அமைச்சர் ஒருவர் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சரவையில் மாற்றங்களை செய்து அமைச்சர் பதவியை வழங்காது போனால், கூட்டு எதிர்க்கட்சியினருடன் இணைந்து வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க போவதாக அந்த முன்னாள் அமைச்சர் உட்பட அவரது அணியினர் அரசாங்கத்தின் தலைமைக்கு அறிவித்துள்ளனர்.

இதனிடையே வரவு செலவுத்திட்டத்தின் போது அரசாங்கத்தை தோற்கடிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக்கட்சியின் சில அமைச்சர்கள், அரசாங்கத்தில் இருந்து விலகிய அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஜனாதிபதியின் அனுமதியை பெற தயாராகி வருவதாக தெரியவருகிறது.

Latest Offers