நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட மகிந்த!

Report Print Vamathevan in அரசியல்

நல்லூர் ஆலயத்தில் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, மற்றும் பிரதி அமைச்சர் அங்கஜன் இரமநாதன் ஆகியோர் விவசாயிகளுக்காக வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வு, நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

விவசாயிகளுக்காக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கும் நலன்கள் இயற்கையோடு ஒன்றித்து சிறந்த அறுவடைகள் விவசாயிக்கும், இந்த நாட்டிற்கும் கிடைக்கப்பெற வேண்டும் என இருவரும் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, கமநலசேவை நிலையங்கள்,காப்புறுதி நிலையங்கள் என அடிப்படை கட்டுமான வசதிகளோடு நவீன கொள்கை திட்டங்களையும் இணைத்து விவசாய திறன்கள் யுகத்தை நோக்கி இட்டு செல்லும் என்பதில் ஐயமில்லை என வழிபாடுகளின் பின்னர் பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் கருத்து வெளியிட்டுள்ளார்.

Latest Offers