பயங்கரவாதத் தடைச் சட்டம்! மௌனம் காக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Report Print Gokulan Gokulan in அரசியல்

தமிழ் மக்களுக்கு எதுவுமே இல்லாத அரசமைப்பு உருவாக்கம் தொடர்பாக அலட்டிக் கொள்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு மாற்றாக புதியதொரு சட்டம் கொண்டு வருவது தொடர்பில் ஏன் மௌனம் காக்கின்றனரென, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கேள்வியெழுப்பினார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில், இன்று நடைபெற்ற உடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், இராணுவத்தை பாதுகாப்பதில் இருக்கின்ற அக்கறை, தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் கூட்டமைப்பினருக்கு இல்லையெனவும் குற்றஞ்சாட்டினார்.

Latest Offers