முன்னாள் விசேட அதிரடிப்படை வீரரான பாதாள உலக்குழு உறுப்பினர் உயிரிழப்பு! மஹிந்தவிற்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் எவ்வித சந்திப்பினையும் நடத்தவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை நேற்று கேகாலை சிறையில் பார்வையிட முன்னாள் ஜனாதிபதி சென்றுள்ளார்.

இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவில்லை. இந்த தகவல் ஓர் முழு பொய். கடந்த ஞாயிற்றுக்கிழமை இவ்வாறான ஓர் சந்திப்பு நடத்தப்படவில்லை.

ஒரு கட்சியில் அங்கம் வகித்து கொண்டு மற்றுமொரு கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்ள முடியாது.

எனினும், மற்றுமொரு கூட்டணியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொள்ள முடியும். பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவராக நானே கடமையாற்றி வருகின்றேன்.

அதன் பொதுச் செயலாளர் முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்னவாவார் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த அரசாங்கத்திற்கு நாட்டையோ அல்லது ரூபாவையோ ஆட்சி செய்ய முடியவில்லை.

முன்னாள் விசேட அதிரடிப்படை உறுப்பினர் ஒருவரான பாதாள உலகக்குழு உறுப்பினர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.

காலில் விலங்கு போட்டாலும் விசேட அதிரடிப்படையினர் நீந்தக் கூடியவர்கள். இவ்வாறான பின்னணியில் எவ்வாறு குறித்த பாதாள உலகக்குழு உறுப்பினர் நீரில் மூழ்கி உயிரிழக்க முடியும் என சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இந்த விடயங்களை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers