தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திட்டம்! முக்கியஸ்தரின் தகவல்

Report Print Rakesh in அரசியல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இவ்வாரம் கொழும்பில் மாபெரும் போராட்டமொன்றை மேற்கொள்ள போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்.

சிறையிலுள்ள 65 தமிழ் அரசியல் கைதிகள், தங்களது விடுதலையை வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் 12 தமிழ் அரசியல் கைதிகளும், வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் 43 தமிழ் அரசியல் கைதிகளும், கண்டி - தும்பர சிறைச்சாலையில் 10 பேருமாக இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை, இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இருப்பினும் அரசு எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் இருக்கின்றது. இவ்வாறு அரசியல் கைதிகள் விடயத்தில் அரசு மௌனம் சாதித்து வருமானால் சர்வதேச சமூகத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை.

இந்த நிலையில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பில் இவ்வாரம் மாபெரும் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Latest Offers