அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் போராட்டம்

Report Print Sumi in அரசியல்

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப் போராட்டத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்கு, அரசியல் கைதிகளை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரி இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், உண்ணாவிரதத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாகவும் நாளை யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து, அநுராதபுரம் வரை மாணவர்கள் நடைபயணமாக சென்று, அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தவுள்ளனர்.

இந்த நடை பயணத்தில் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றிணையுமாறும் அழைப்புவிடுத்துள்ளனர்.

Latest Offers