மைத்திரி - மகிந்தவுக்கு இடையிலான இரகசிய சந்திப்பு உண்மையா?

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் இரகசிய சந்திப்பு உண்மைக்கு புறம்பானது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் இரகசிய சந்திப்பு ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கவின் வீட்டில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது குறித்து மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தன்னுடைய வீட்டில் இடம்பெற்ற இரவு நேர விருந்து ஒன்றுக்கு மட்டுமே முன்னாள் ஜனாதிபதி வருகை தந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்போது விசேடமான அரசியல் கலந்துரையாடல்கள் எதுவும் இடம்பெறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் புதிய கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் வகையில் இந்தக் கூட்டணியை அமைப்பது குறித்தும், அந்த அரசாங்கத்தின் பிரதமராக மகிந்த ராஜபக்சவை நியமிப்பதற்கான யோசனையும் இந்த சந்திப்பின்போது பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers