அரசாங்கத்தை கவிழ்க்க திட்டம்? நாடு திரும்பியதும் அவசர கூட்டத்துக்கு ரணில் ஏற்பாடு!

Report Print Rakesh in அரசியல்

நோர்வே மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளைமறுதினம் 10ம் திகதி புதன்கிழமை நாடு திரும்பவுள்ளார்.

நாடு திரும்பிய கையோடு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்றை அவர் நடத்தவுள்ளார்.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை எப்படியாவது பதவி நீக்கம் செய்துவிட வேண்டும் என்பதில் கூட்டரசிலிருந்து வெளியேறிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேர் கொண்ட உறுப்பினர்கள் குறியாக இருக்கின்றனர்.

இதற்காக மஹிந்த அணியின் உதவியையும் அவர்கள் நாடியுள்ளனர்.

அத்துடன், இடைக்கால அரசு அமைப்பது குறித்த பேச்சுகளும் ஆரம்பமாகியுள்ளன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே நாடு திரும்பிய கையோடு பிரதமர் ரணில் கூட்டம் நடத்தவுள்ளார்.

Latest Offers