இன்று பீரிஸின் இல்லத்தில் மகிந்த தலைமையில் முக்கிய சந்திப்பு

Report Print Rakesh in அரசியல்

பொது எதிரணி எம்.பிக்களுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பு இன்று 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் இல்லத்தில் இடம்பெறவுள்ள இந்தச் சந்திப்பில் கட்டாயம் பங்கேற்குமாறு பொது எதிரணியின் சகல எம்.பிக்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

கூட்டரசிலிருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் இடைக்கால அரசு அமைப்பது குறித்து இதன்போது பேசப்படவுள்ளது என்றும், அரசியலமைப்பு ரீதியில் அதற்கு உள்ள தடங்கல் நிலைகள் சம்பந்தமாக விரிவாக ஆராயப்படும் என்றும் தெரியவருகின்றது.

இடைக்கால அரசு அமைக்கும் யோசனை கூட்டத்தில் முன்வைக்கப்படும் என்று பொது எதிரணியின் இரத்தினபுரி மாவட்ட எம்.பியான ரஞ்சித டி சொய்சா கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இடைக்கால அரசு அமைப்பதற்கு இலங்கை அரசியலமைப்பில் ஏற்பாடு இல்லை என்றும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே அத்தகையதொரு அரசை அமைக்க முடியும் என்றும் சட்டநிபுணர் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers