பதில் முதலமைச்சராக கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தியுள்ளேன்

Report Print Thirumal Thirumal in அரசியல்

பதில் முதலமைச்சராக கிடைத்த பதவியினை கொண்டு 422 பேருக்கு விவசாய அமைச்சு மற்றும் திணைக்களங்களில்நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொடுத்திருக்கிறேன் என மத்திய மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் எம்.ரமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் திணைக்களங்களில் சேவையாற்றவென 67 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு ஹட்டன் சீடா வள நிலையத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

என்னுடைய மூன்று வருட ஆட்சி காலப்பகுதியில் இந்த சமூகத்திற்கு என்னனென்ன செய்திருக்கின்றேன் என என்னால் பட்டியலிட்டு காட்ட முடியும்.

தங்களுக்கு கிடைத்த இந்த நியமனத்தின் மூலம் தொழிலுக்கு கௌரவம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

எனக்கு பதில் முதலமைச்சர் பதவி கிடைத்தவுடன் முகநூலில் பல்வேறு விதமான வாதங்களை பலர் முன்வைத்திருந்தனர்.

ஒரு சிலர் பதில் முதலமைச்சர் பதவியினை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறார் என கேள்வி எழுப்பி இருந்தனர்.

எனக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்கும் போதெல்லாம் அதனை சரியாக பயன்படுத்தி நுவரெலியா, மாத்தளை, கண்டி ஆகிய மூன்று மாவட்டங்ளுக்கு பல்வேறு வேலைகளை செய்திருக்கின்றேன் என கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் விவசாய அமைச்சின் செயலாளர், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers