விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம்?

Report Print Shalini in அரசியல்

ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இருப்பதாக “நானே ஆயுதம் கொடுத்தேன், நானே வைத்திருந்தேன்” என ஹிஸ்புல்லா தெரிவித்த கருத்தை வைத்தே நாமும் கூறினோம்” என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் இன்பராசா தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிற்கு எதிராக, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தொடர்ந்திருந்த வழக்கு விசாரணைகள் திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவில் நேற்று இடம்பெற்றுள்ளது.

விசாரணைகள் நிறைவடைந்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடந்த மாதம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் தலைமையில் ஆயுதம் இருப்பதாக எமக்கு தெரிந்த தகவலை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தோம்.

அதற்கு பல எதிர்ப்புகள் வந்த நிலையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு இது தொடர்பில் முறைப்பாடு செய்திருந்தோம். அதற்கான விசாரணைகள் தற்போது இடம்பெற்றிருந்தன.

2004ஆம் அண்டு கருணாவின் பிளவுக்கு பின்னால் 5125 போராளிகள் இருந்தார்கள். அதில் ஒரு சிலர் கருணாவுடன் சேர்ந்த நிலையில் எஞ்சிய 3000க்கும் மேற்பட்ட போராளிகள் ஆயுதங்களை வைத்திருந்தார்கள்.

அவை காட்டு வழியிலும், பாதைகளிலும் ஆங்காங்கே வீசப்பட்டு இருந்தது. அவர்கள் தற்போது வெளிநாடுகளுக்கு சென்று விட்டார்கள்.

அந்த ஆயுதங்கள் ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இருப்பதாக “நானே ஆயுதம் கொடுத்தேன், நானே வைத்திருந்தேன்” என ஹிஸ்புல்லா தெரிவித்த கருத்தை வைத்தே நாமும் கூறினோம்” என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் இன்பராசா தெரிவித்துள்ளார்.

Latest Offers