ராஜபக்ஸ குடும்பத்தின் அடுத்த ஜனாதிபதி யார்? பகிரங்கப்படுத்திய கோத்தபாய

Report Print Kamel Kamel in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்சவின் பெயரை தாம் முன்மொழிவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

டீ.ஏ.ராஜபக்ச நினைவுத்தூபி அமைப்பது தொடர்பிலான ஊழல் மோசடி குறித்த வழக்கு விசாரணைகளுக்காக இன்று நீதிமன்றில் முன்னிலையான பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

எங்களது குடும்பத்தில் குழப்பம் விளைவிக்கும் நோக்கில் சில தரப்பினர் போலியான செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யார் வேட்பாளர் என்பதனை இன்னமும் மஹிந்த ராஜபக்ச தீர்மானிக்கவில்லை.

நாடு மிகவும் ஓர் துர்ப்பாக்கிய நிலையை எதிர் நோக்கியுள்ளது. எனவே எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதை அவர்கள் எவ்வாறு செய்வார்கள் என்பது எனக்குத் தெரியாது என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.