எரிபொருள் விலைச் சூத்திரம் பற்றி எனக்கும் தெரியாது! நிதி அமைச்சர்

Report Print Kamel Kamel in அரசியல்

எரிபொருள் விலைச் சூத்திரம் பற்றி எனக்கும் தெரியாது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

சிங்கப்பூர் ப்ளோடிஸ்ட் பிரைஸ் மற்றும் டொலரின் பெறுமதி அடிப்படையில் இந்த விலைச் சூத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு விடயங்களின் அடிப்படையில் விலைச் சூத்திரம் உருவாக்கப்படுகின்றது.

இந்த விடயம் குறித்து மக்கள் பிரச்சினை அடைய வேண்டிய அவசியமில்லை. செய்யும் எல்லா விடயங்கள் பற்றியும் நாம் புரிந்து கொள்ள வேண்டியதில்லை.

நாம் மருத்துவர் அல்லாத போதிலும் நிபுணத்துவ மருத்துவர் வழங்கும் நோய் ஒன்றுக்கு மருந்து வழங்கினால் அது சரியானது என்பது தெரியும்.

உலக சந்தையில் விலை ஏறினால் உள்நாட்டில் விலை ஏறும், ரூபாவின் பெறுமதி வலுவடைந்தால் விலை குறையும் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

Latest Offers