விடுதலைப் புலிகள் பொருளாதார ரீதியில் இன்றும் பலமாகவே இருக்கின்றனர்!

Report Print Murali Murali in அரசியல்

விடுதலைப் புலிகள் அமைப்பானது தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் பொருளாதார ரீதியில் அந்த அமைப்பானது மிகவும் பலமாகவே காணப்படுகின்றது என முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் புலம்பெயர் தமிழர்களிடமுள்ள நிதியை இலங்கையில் முதலீடு செய்யுமாறு அரசாங்கம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளமையானது நாட்டிற்கு பாதகமாக அமையும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“புலம்பெயர் தமிழர்களிடமுள்ள நிதியை இலங்கையில் முதலீடு செய்யுமாறு அரசாங்கம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பானது ஆயுத ரீதியில் தோற்றகடிக்கப்பட்டுள்ள போதிலும் பொருளாதார ரீதியில் அந்த அமைப்பானது மிகவும் பலமான அமைப்பாக காணப்படுகின்றது

அவர்களுக்கு லண்டன் நகரில் எரிபொருள் நிரப்பு நிலையம் உட்பட ஏராளமான நிறுவனங்களும் உள்ளன.

எனவே தற்போதைய நிலையில் இலங்கையில் பொருளாதார மத்திய நிலைய வேலைத்திட்டங்களில் அவர்களின் பலத்தைக் காண்பிப்பதற்கு கதவு திறக்கப்பட்டுள்ளமையானது நாட்டிற்கு ஆபத்தாக அமையும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.