நவம்பர் ஐந்தில் வரவு செலவுத்திட்டத்தை நாடாளுமன்றில் முன்வைக்க முடியாது?

Report Print Jeslin Jeslin in அரசியல்

நவம்பர் 5ஆம் திகதி வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டு ஒரு மாதத்தின் பின்னரேயே வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட வேண்டும் என்பது நாடாளுமன்ற சம்பிரதாயம்.

இன்று(09) வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலம் முன்வைத்தால் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்ட பின்னரே வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும்.

எனவே நவம்பர் 5ஆம் திகதி ஆகும் போது ஒரு மாத காலத்தை அடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers