இராணுவம் இருப்பதை தமிழர்கள் விரும்புகின்றனர்! லண்டனில் ரணில் தெரிவிப்பு

Report Print Murali Murali in அரசியல்

போர்க்கால மீறல்களுக்கு பொறுப்புக்கூறும் செயல்முறைகளில் அனைத்துலகத் தலையீட்டுக்கு அவசியமில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க லண்டனில் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவுக்குப் வஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய போதே இதனை கூறியுள்ளார்.

இப்போதைய சூழ்நிலையில், விசாரணைகளில் வெளிநாட்டுத் தலையீடுகளின் தேவையை நாங்கள் உணரவில்லை. வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்கள் இராணுவத்தின் இருப்பை விரும்புகின்றனர்.

எவ்வாறயினும், இலங்கையில், தொடரும் சித்திரவதைகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதிலளிக்காமல் நழுவினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஒக்ஸ்போர்ட் யூனியனில் நேற்றுமாலை உரையாற்றிக் கொண்டிருந்த போது, அவருக்கு எதிராக ஒக்ஸ்போர்ட் யூனியன் கட்டடத்துக்கு வெளியே புலம்பெயர் தமிழர்களால் போராட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது.

Latest Offers