உறுதியளிக்க முடியுமா? நாமலிடம் கேட்ட சிறீதரன் எம்.பி

Report Print Rakesh in அரசியல்

உங்கள் தந்தை ஆட்சிக்கு வந்த பிறகு இணைந்த வடக்கு - கிழக்கிற்கு தீர்வை வழங்குவார் என்று உறுதியளிக்க முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்படி விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, தமிழ் மக்களுக்கு 2015இல் வழங்கிய வாக்குறுதியை இந்த அரசு மீறிவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதை நிறைவேற்ற பாடுபடவில்லை. எமது ஆட்சியில் முன்னாள் போராளிகளை புனர்வாழ்வளித்து விடுதலை செய்தோம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்,

நாங்கள் எதிர்க்கட்சி எம்.பிக்கள். இந்த கேள்வியை நீங்கள் அரசிடம்தான் கேட்கவேண்டும். ஆட்சிக்கு வரும்வரை தான் எல்லாம். நீங்கள் சிறைக்கு சென்ற பிறகுதான், அரசியல் கைதிகளின் வேதனை புரிந்துள்ளது.

நீங்கள் உண்மையாகவே அக்கறையுள்ள நபர் எனில், உங்கள் தந்தை (மஹிந்த ராஜபக்ச) ஆட்சிக்கு வந்த பிறகு இணைந்த வடக்கு - கிழக்கில் தீர்வை வழங்குவார் என்று உறுதியளிக்க முடியுமா?

காணாமல்போனோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் விவகாரத்துக்கு தீர்வுகளை காண முடியுமா? என வினவியுள்ளார்.

Latest Offers