ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கோத்தபாயவின் கருத்துக்கு பசிலின் பதில்

Report Print Shalini in அரசியல்

கோத்தபாய ராஜபக்ச என்னை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழிந்தாலும் நீண்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்ட பின்னரே அது தீர்மானிக்கப்படும் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்சவின் பெயரை தாம் முன்மொழிவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பசில் ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

கோத்தபாய ராஜபக்ஸ அவ்வாறு கருத்து தெரிவித்திருந்தாலும், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து நீண்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்ட பின்னரே அது தீர்மானிக்கப்படும்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.எமது காலமும் நேரமும் நீதிமன்றங்களில் ஏறி இறங்கியே கழிவதாகவும் குறிப்பிட்டார்.

நேற்றைய தினம் மாத்திரம் மூன்று ராஜபக்ஸர்கள் புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தரவேண்டி இருந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

Latest Offers