முல்லைத்தீவில் பிடிப்பட்ட ஆயுதங்கள் ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டத்தின் அங்கமாக இருக்கலாம்!

Report Print Steephen Steephen in அரசியல்

முல்லைத்தீவு பிரதேசத்தில் பிடிப்பட்ட ஆயுதங்கள் சம்பந்தமாக பொலிஸ் விசாரணைகள் சரியான முறையில் இடம்பெற வில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அது ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டத்தின் ஒரு அங்கமாக இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

பிடிப்பட்ட ஆயுதங்களில் ஸ்னைப்பர் துப்பாக்கியின் ஸ்கோப் கண்டி இருந்தது. இது சம்பந்தமாக பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு யோசனை முன்வைக்கப்பட்ட போதிலும் இதுவரை எவ்வித விசாரணைகளும் நடத்தப்படவில்லை.

இதேவேளை, இந்த விடயம் சம்பந்தமாக தெளிவுப்படுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளருக்கு சவால் விடுப்பதாகவும் மகிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers