யார் என்ன கனவு கண்டாலும் ஐ.தே.க தொடர்ந்தும் நாட்டை ஆளும்: சரத் பொன்சேகா

Report Print Steephen Steephen in அரசியல்

எந்த வழியிலேனும் இந்த அரசாங்கம் எஞ்சியிருக்கும் இரண்டாண்டு பதவிக் காலத்தையும் ஆட்சி செய்யும் என அமைச்சர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது,

காபந்து அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டியதில்லை, இந்த அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளது இந்த நிலையில் வேறும் எவரும் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள அவசியமில்லை.

மக்களினால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமொன்று ஆட்சியில் உள்ளது. நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்திடம் நாட்டை ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறான ஓர் நிலையில் ஒவ்வொரு வகை வகையான பொறுப்பாளர்கள் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை.

மஹிந்த மைத்திரி தரப்பு காபந்து அரசாங்கம் பற்றி பேசியதாக வெளியாகும் தகவல்களை நம்ப முடியவில்லை.

மலர் மொட்டுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து கொள்ளும் என நினைக்க முடியவில்லை. யார் என்ன கனவு கண்டாலும் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் இந்த நாட்டை ஆட்சி செய்யும்.

எந்தவொரு வழியிலேனும் எஞ்சியிருக்கும் ஆட்சிக் காலத்தை முன்னெடுப்போம்.

பதவிக் கால நிறைவின் பின்னர் தேர்தலுக்காக நாம் மக்கள் எதிரில் நிற்போம் என பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Latest Offers