திடீரென சந்தித்துக்கொண்ட ஜனாதிபதிகள்!

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மாலைதீவு ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள இப்ராஹிம் மொஹமட் சோலி இடையில் இன்று முற்பகல் திடீர் சந்திப்பொன்று நடைபெற்றது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீசெல்ஸ் நாட்டுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை முடித்துக்கொண்டு இன்று நாடு திரும்பினார்.

மாலைதீவு ஜனாதிபதி சிங்கப்பூர் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் சென்றிருந்தார். இதன் போதே இந்த சந்திப்பு நடந்ததுள்ளது.

Latest Offers