பெரும்பான்மை பலமின்றி இடைக்கால அரசை அமைக்க முடியாது: அஜித் பீ. பெரேரா

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாமல் எவருக்கு இடைக்கால பொறுப்பு அரசாங்கத்தை அமைக்க முடியாது என பிரதியமைச்ச் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

மின்வலு எரிசக்தி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நாட்டை ஸ்திரமற்ற நிலைமைக்குள் தள்ள சிலர் இப்படியான பொய் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

எந்த அரசியல் தலைவர்களாக இருந்தாலும் நட்புறவு ரீதியில் சந்தித்து பேச முடியும். அதில் எந்த தவறும் கிடையாது.

எவ்வாறாயினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு கிடைத்த மக்கள் ஆணையை கவனத்தில் கொள்ளாமல் செயற்பட மாட்டார் எனவும் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers