மைத்திரியை கொலை செய்யும் சதி பின்னணியில் முக்கிய அரசியல்வாதி? நாளை வெளியாகும் குரல் பதிவு

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்வதற்கான சூழ்ச்சியுடன் தொடர்பு கொண்ட மேலும் பல தொலைபேசி குரல் பதிவுகள் வெளியாக்கப்படவுள்ளன.

இவ்வாறான 20 குரல்பதிவுகளை நாளையதினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கவிருப்பதாக, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டு இணைப்பாளர் நாமல் குமார தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கையின் மிக முக்கியமான அரசியல்வாதி ஒருவரின் குரல் பதிவும் அதில் அடங்குவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers