தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக புதிய சட்டம் பயன்படுத்தக் கூடாது! நாடாளுமன்றில் இரா.சம்பந்தன்

Report Print Nivetha in அரசியல்

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது.

இதன் போது இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு பதிலாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக்கூடாது.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை. அவர்களால் வழங்கப்பட்ட வாக்குமூலங்களைத் தவிர எந்த ஆதாரமும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநீதியான முறையில் அவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இது சர்வதேச கோட்பாடுகளுக்கு முரணான செயலாகும். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலமானது தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படக்கூடாது.

குற்றம் இழைந்திருந்தாலும் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

Latest Offers