இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக் கொள்ள இலங்கையும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையும், பாகிஸ்தானும் இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக் கொள்ளும் வகையிலான பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன.

பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரை நேற்று தமது அமைச்சுக்கு அழைத்த இலங்கையின் வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன இது குறித்த கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

இதன்போது இலங்கையின் மாணவர்களுக்கு பாகிஸ்தானில் வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.

அத்துடன் இரண்டு நாடுகளின் ஒத்துழைப்புடன் நிறுவப்படவுள்ள கொம்சட்ஸ் பல்கலைக்கழகம் தொடர்பிலும் நேற்று பேசப்பட்டுள்ளது.

Latest Offers