ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

Report Print Steephen Steephen in அரசியல்

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் எனக் கோரி அந்த அமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

ஞானசார தேரர் நீதிமன்றத்தில் கருத்து வெளியிட்ட போதிலும் அது எந்த வகையிலும் நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கில் செய்த காரியமல்ல என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அது இராணுவ புலனாய்வாளர்களை தேவையற்ற வகையில் சிறையில் தடுத்து வைத்துள்ளமை தொடர்பில் அகிம்சையாக விடுத்த கோரிக்கை எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் இப்படி பேசியது தவறாக இருக்குமாயின் மன்னிக்குமாறு ஞானசார தேரர், அந்த சந்தர்ப்பத்திலேயே கோரிக்கை விடுத்தார்.

எவ்வாறாயினும் ஞானசார தேரருக்கு எதிரான இந்த நடவடிக்கையின் பின்னணியில் ஏதாவது சதித்திட்டங்கள் இருக்கலாம். இதனால், இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு பொதுபல சேனா ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.