பிரதமர் உரையாற்றும் போது சபையில் இருந்து வெளியேறிய ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்

இந்து சமுத்திரத்தில் எமது எதிர்காலத்தை வரையறை செய்தல்” என்ற தலைப்பிலான விசேட சர்வதேச மாநாடு இன்று அலரி மாளிகையில் ஆரம்பமானது.

இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாடு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் முயற்சியின் பலனாக நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் ஆரம்ப உரையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்த்தவிருந்தார். மாநாடில் ஜனாதிபதி கலந்துக்கொண்டிருந்த போதிலும் பிரதான மேடையிலும் அவர் ஏறவில்லை.

ஜனாதிபதிக்கு விசேட பணி ஒன்று இருப்பதன் காரணமாக ஜனாதிபதி மாநாட்டில் இருந்து புறப்பட்டுச் செல்ல உள்ளதாக அறிவிப்பாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் வந்து அமருமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அவர் வரவில்லை என்பதால் அறிவிப்பாளர் மன்னிப்பு கோரியதுடன் அந்த ஆசனத்தில் வந்து அமருமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தின் பணிப்பாளர் கணேசன் விக்னராஜா மற்றும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரது வரவேற்புரை மற்றும் நோக்கத்தை தெளிவுப்படுத்தும் உரையின் பின்னர் பிரதான உரையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிகழ்த்தினார்.

பிரதமர் உரையாற்றிக்கொண்டிருந்த போது ஜனாதிபதி சபையில் இருந்து வெளியேறினார். ஜனாதிபதி, தான் வெளியேறுவதாக பிரதமருக்கு சமிக்ஞை காட்டினார். உரையை சற்று நேரம் நிறுத்திய பிரதமர் தலையை ஆட்டி ஜனாதிபதியின் சமிக்ஞைக்கு பதிலளித்தார்.

பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா மேடையில் அங்குமிங்கும் நடந்து மாநாட்டை வெற்றிகரமான நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதை காணமுடிந்தது.

இந்த மாநாடு தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாநாட்டில் ஆரம்ப உரையை நிகழ்த்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Latest Offers