இடைக்கால அரசு பற்றிய எதிர்பார்ப்பில்லை - மகிந்த ராஜபக்ச

Report Print Steephen Steephen in அரசியல்

இடைக்கால அரசாங்கம் பற்றி யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அது நடக்கும் வரை அது பற்றிய எதிர்பார்ப்பு தனக்கில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாராஹென்பிட்டிய அபயராம விகாரையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அதேவேளை கூடிய விரைவில் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரை கொலை செய்யும் முயற்சி தொடர்பான சதித்திட்டத்தை பொலிஸார் தலையிட்டு மேற்கொண்டுள்ளனர். இது மிகவும் பாரதூரமான நிலைமை.

அத்துடன் தெரிவு செய்யப்பட்ட வழக்குகளே நீதிமன்றத்தில் தொடரப்படுகின்றன. நீதிமன்றம் இந்த நிலைமை குறித்து கண் திறந்து பார்க்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers