புதிய பிரதம நீதியரசர் தொடர்பில் நாளை தீர்மானம்!

Report Print Steephen Steephen in அரசியல்

புதிய பிரதம நீதியரசர் சம்பந்தமாக தீர்மானிக்க புதிய அரசியலமைப்புச் சபை நாளை காலை கூட உள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பிரதம நீதியரசர் பியசாத் டெப் நாளைய தினம் ஓய்வுபெறவுள்ளார். புதிய அரசியலமைப்புச் சபைக்கு மூன்று சிவில் பிரதிநிதிகள் இன்று நியமிக்கப்பட்டனர்.

சபையில் குறைப்பாடுகள் இருக்குமாயின் அவற்றை கலந்துரையாடி தீர்க்க உள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்புச் சபைக்கான சிவில் பிரதிநிதிகளை நியமிக்கும் யோசனை இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்பட்ட போதே சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார்.

Latest Offers