உயர் நீதிமன்றத்தில் துமிந்த சில்வாவை கட்டியணைத்து அழுத உறவினர்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட மூன்று பேரின் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியதை அடுத்து, அவரது உறவினர்கள் துமிந்த சில்வாவை கட்டி அணைத்து அழுது தமது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

துமிந்த சில்வாவின் தந்தை, இளைய சகோதரர், தங்கை, தாயின் தங்கை ஆகியோர் தீர்ப்பு வழங்கப்பட்ட போது நீதிமன்ற மண்டபத்தில் அவரை கட்டிப்பிடித்து அழுதுள்ளனர்.

மற்றுமொரு குற்றவாளியான தெமட்டகொட சமிந்த என்ற சமிந்த ரவி ஜயநாத், உயர் நீதிமன்றத்திற்கு வெளியில் அழைத்து வரப்பட்ட போது இவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் கதறி அழுதனர்.

தீர்ப்பு அறிவிக்கப்பட்டு 40 நிமிடங்களுக்குள் துமிந்த சில்வா உட்பட குற்றவாளிகளை சிறைச்சாலை காவலர்கள் உயர் நீதிமன்றத்தின் முன் நுழைவாயில் ஊடாக அழைத்து வந்து சிறைச்சாலை அம்பியூலன்ஸ் வண்டியில் ஏற்றி, சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்.

Latest Offers