யாழ்ப்பாணத்தில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலான கூட்டம் ஒன்று எதிர்வரும் 16ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் முப்படைத் தளபதிகள் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போதும் 4 ஆயிரத்து 265 ஏக்கர் காணி இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு, கிழக்கில் உள்ள பொதுமக்களின் காணிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ள நிலையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.