பிரதம நீதியரசர் பதவிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி நளின் பெரேராவின் பெயர் பரிந்துரை

Report Print Jeslin Jeslin in அரசியல்

உயர் நீதிமன்றத்தின் புதிய பிரதம நீதியரசர் பதவிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி நளின் பெரேராவின் பெயர் ஜனாதிபதியினால் அரசியலமைப்புச் சபைக்குப் பிரேரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் நாளை (12) ஓய்வு பெறவுள்ளதனால் ஏற்பட்டுள்ள பதவி இடைவெளிக்கே ஜனாதிபதியினால் நளின் பெரேராவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் பிரேரிக்கப்பட்டுள்ள நபர் அரசியலமைப்புச் சபையினால் ஏற்றுக் கொள்ளப்படின் நாளை மறுதினமே (13) பதவிப் பிரமாணம் இடம்பெறும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

புதிய பிரதம நீதியரசரை தெரிவு செய்வதற்கு அரசியலமைப்புச் சபை நாளை (12) கூடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers