குறைக்கப்படுமா எரிபொருட்களின் விலைகள்? அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பணிப்புரை

Report Print Kamel Kamel in அரசியல்

எரிபொருட்களின் விலைகளை குறைப்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் விலையை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் பெற்றோல், டீசலின் விலைகளை குறைப்பதற்கான சாத்தியம் குறித்த எதிர்வு கூறல் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் நேற்று பணிப்புரை விடுத்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருளின் விலைகள் குறைவடைவதற்கு நிகராக இலங்கையிலும் விலைகள் குறைக்கப்பட வேண்டுமெனவும், நலன்கள் மக்களை சென்றடைய வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விலை சூத்திரத்தின் அடிப்படையில் மாதத்தின் 10ஆம் திகதி வரையில் காத்திருக்காது உலக சந்தையில் விலை குறைந்தவுடன் மக்களுக்கு அதன் பலனை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரதமர் வழங்கிய பணிப்புரைக்கு அமைய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என அமைச்சர் வஜிர அபேவர்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Latest Offers