அமைச்சரொருவரின் தீர்வினை முற்றாக நிராகரித்த தமிழத் தேசியக் கூட்டமைப்பு

Report Print Kumar in அரசியல்

தமிழ் அரசியல் கைதிகள் தீர்வு தொடர்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்த தீர்வினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்றாக நிராகரித்துவிட்டதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று மாலை நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

மக்களினால் நிராக்கரிப்பட்டவர்களே இன்று காபந்து அரசாங்கம் தொடர்பாக பேசி வருகின்றனர். கடந்த காலத்தில் இந்த நாட்டில் இன பதற்றம் இருந்தது. ஆனால் அந்த நிலை இன்று இல்லை.

இன்று இந்த நாட்டில் இனப்பிரச்சினை மட்டுமே உள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தீர்வு காணும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் தமிழ் அரசியல் கைதிகள் தீர்வு தொடர்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்த தீர்வினை ஆராய்ந்து அதன் ஊடாக ஒரு முடிவுக்கு வரக்கூடிய சந்தர்ப்பம் இருந்த போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை முற்றாக நிராகரித்துவிட்டது.

அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்த தீர்வினை நானும் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அதனை ஒரு தொடக்க புள்ளியாக வைத்து பேசியிருந்தால் இந்த நேரம் தீர்வு எட்டப்பட்டிருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.