அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து முதலமைச்சர் தலைமையில் விசேட கூட்டம்

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராய்வதற்காக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று ஆரம்பமாகியுள்ளது.

முதலமைச்சரில் அலுவலகத்தில் இன்றைய தினம் காலை 11 மணிக்கு இக் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இந்த கூட்டத்தில் பொது அமைப்புக்கள், முன்னாள் அரசியல் கைதிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி 29 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதனால் அவர்களின் உடல் நிலை மோசமாகியுள்ளதை தொடர்ந்து அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பு நேற்று முதலமைச்சரை சந்தித்திருந்தது.

இதையடுத்தே அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் விசேட கூட்டம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers