முத்து சிவலிங்கத்தை பிரதியமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு தொண்டமான் அறிவிப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக பிரதியமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு பிரதியமைச்சர் முத்து சிவலிங்கத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அறிவித்துள்ளதாக தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிய மற்றும் ஆரம்ப கைத்தொழில் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆலோசகராக கடமையாற்றி வருகிறார்.

கடந்த பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் முத்து சிவலிங்கம் ஆகியோர் மட்டுமே நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.