ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அரசியலமைப்புச் சபை அனுமதி

Report Print Steephen Steephen in அரசியல்

புதிய பிரதம நீதியரசர் பதவிக்கு ஜனாதிபதி பரிந்துரைத்த நீதியரசருக்கு அரசியலமைப்புச் சபையின் அனுமதி கிடைத்துள்ளதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் ஜனாதிபதி பரிந்துரைத்த உயர் நீதிமன்ற நீதியரசர் நளின் பெரேரா புதிய பிரதம நீதியரசராக நாளைய தினம் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ள உள்ளார்.

நளின் பெரேரா, நீதவான் நீதிமன்றங்களில் இருந்து பதவி உயர்வு பெற்று படிப்படியாக மேல் நீதிமன்றங்களின் நீதிபதியாக பதவி வகித்து வந்துள்ளதுடன் கடந்த 2016 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார்.

இதுவரை உயர் நீதிமன்ற பிரதம நீதியரசராக கடமையாற்றி வந்த பியசாத் டெப் இன்றுடன் பணியில் இருந்து ஓய்வுபெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers