இலங்கையுடன் நெருங்கிய தொடர்புகளை பேண ரஸ்ய ஜனாதிபதி அழைப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையுடன் நெருங்கிய தொடர்புகளை பேண ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையின் ரஸ்யாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள தயான் ஜயதிலக்க நேற்று புட்டினிடம் தமது நியமனக் கடிதங்களை கையளித்தபோதே புட்டின் இந்தக்கருத்தை வெளியிட்டார்.

இலங்கையுடன் ரஸ்யா, மரபுரீதியான நட்பை பேணிவருகிறது. இந்தநிலையில் மீன்பிடி உட்பட்ட பல துறைகளில் ரஸ்யா இணைந்து செயற்பட விரும்புகிறது என்றும் புட்டின் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ரஸ்யா, சர்வதேசத்துடன் அமைதியாகவும், சுதந்திரமாகவும் செயற்பட விரும்புகிறது என்றும் புட்டின் தெரிவித்துள்ளார்.

Latest Offers