வரலாற்றில் சிரேஸ்ட நீதியரசர் பிரதமநீதியரசராக பரிந்துரை! ஜனாதிபதி

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக உயர்நீதிமன்றத்தின் சிரேஸ்ட நீதியரசர் ஒருவர் பிரதம நீதியரசராக தம்மால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையின் வரலாற்றில் பல தடவைகள், அரசியல் ரீதியாக, தனிப்பட்ட செல்வாக்கின் அடிப்படையில் பிரதமநீதியரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், நளின் பெரேராவின் சேவை மற்றும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு அவரை பிரதம நீதியரசராக நியமித்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நளின் பெரேரா 38 வருடங்களாக நீதித்துறையில் சேவையாற்றியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers