2020 ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க சார்பில் யாரை களமிறக்குவது?

Report Print Kamel Kamel in அரசியல்

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யாரை களமிறக்குவது என்பது குறித்து கட்சிக்குள் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் இது குறித்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஐந்து அமைச்சர்கள் இது தொடர்பில் அண்மையில் முக்கிய அமைச்சர் ஒருவரின் வீட்டில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

சபாநாயகர் கரு ஜயசூரிய அல்லது வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவை கட்சியின் வேட்பாளராக நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியை விட்டுச் சென்ற கெஹலிய ரம்புக்வெல்ல, திஸ்ஸ அத்தநாயக்க போன்றோரின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொண்டு வேட்பாளரை தெரிவு செய்து களமிறக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.