ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் முடிவெடுப்போம் என்கிறார் சம்பந்தன்

Report Print Rakesh in அரசியல்

ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் வரவு - செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதா இல்லையா என்பது தொடர்பில் நாம் முடிவெடுப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுவிப்புக்காக, வரவு - செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு பேரம் பேசும் சக்தியாகப் பயன்படுத்த வேண்டும் என்று சிவில் அமைப்புக்கள் தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில் இன்று தமிழ் ஊடகம் ஒன்று கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

"எதிர்வரும் புதன்கிழமை அரசியல் கைதிகளின் விடுவிப்புத் தொடர்பில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்தவுள்ளோம்.

அந்தப் பேச்சின் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பது தெரியாது. அதன் பின்னரே, வரவு - செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் நாம் முடிவெடுப்போம்" - என்று இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers