ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள கவலை!

Report Print Steephen Steephen in அரசியல்

அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் தமது பொறுப்பையும் கடமையையும் கொள்ளை, மோசடி ஊழல், முறைகேடுகள் இன்றி செய்தால், நாட்டின் பொருளாதார இலக்கை அடைவது சிரமமான காரியமாக இருக்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலை வெளியிட்டுள்ளார்.

மகர பிரதேசத்தில் புதிய நிர்வாக கட்டடம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாங்கள் அடுத்த சில தினங்களில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்வோம். வருடாந்தம் வரவு செலவுத்திட்டத்தில் துண்டு விழும் தொகை அதிகரித்து வருகிறது.

அரச சேவையில் உயர் பதவிகளில் இருந்து பல அதிகாரிகள் அரசியல்வாதிகள் பழக்கப்படுத்திய கொள்ளையடிப்புக்கு அடிமையாகியுள்ளனர்.

வீண் விரயம், கொள்ளையடிப்பு என்பனவே இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு பிரதான சவாலாக இருக்கின்றது.

சிலர் பணம் சம்பாதிப்பதற்காகவே அரசியலுக்கு வருகின்றனர். நாட்டில் உள்ள அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் ஊழல், மோசடிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள்.

இவர்களால் மேடைகளில் ஏறி தாம் திருடர்கள் அல்ல என்று கூற முடியாது. மக்களும் ஊழல், மோசடிகளுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கே வாக்களித்து வெற்றி பெற செய்கின்றனர்.

அதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி என்பது இலங்கைக்கு மாத்திரம் உரியதல்ல. பல நாடுகளில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

டொலர் கையிருப்பில் இல்லாததே இதற்கு காரணம். டொலர் கையிருப்பை அதிகரிக்க ஏற்றுமதி பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers