தனியார் நிறுவனங்களில் தொழில் புரிபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Report Print Thirumal Thirumal in அரசியல்

தனியார் நிறுவனங்களில் தொழில் புரிபவர்களுக்கும் ஓய்வூதியம் உள்ளிட்ட அரசாங்க தொழிலில் வழங்கப்படுகின்ற சலுகைகளை வழங்க ஐ.தே.க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.

பண்டாரவளை - பூனாகலை, அம்பிட்டிகந்த தோட்டத்தில் அமைக்கப்பட்ட 157 வீடுகள் நேற்று மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

தோட்ட தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் அடிப்படையிலான சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த நிலையில் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை உயரும் வகையில் நியாயமான சம்பள உயர்வு ஒன்றை முதலாளிமார் சம்மேளனத்திடமிருந்து ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக் கொடுக்கும்.

அரசாங்க தொழிலை எதிர்பார்க்கின்றவர்கள் அரச திணைக்களங்களில் வழங்கப்படுகின்ற சலுகைகள் தனியார் நிறுவனங்களில் கிடைக்கப் பெறுவதில்லை என தெரிவிக்கின்றனர்.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக எதிர்வரும்காலத்தில் தனியார் நிறுவனங்களில் தொழில் புரிபவர்களுக்கும் ஓய்வூதியம் உள்ளிட்ட அரசாங்க தொழிலில் வழங்கப்படுகின்ற சலுகைகளை வழங்க ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.