ஹிருணிகாவுக்கு வாழ்த்து கூறிய நாமல் ராஜபக்ச

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். ஹிருணிகாவுக்கு மகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்துக்கள் என நாமல் ராஜபக்ச டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகித்த ஹிருணிகா பிரேமச்சந்திர, அந்த அரசாங்கத்தில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் வெளியேறிவர்களில் ஒருவர்.

ஹிருணிகா தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதுடன், அந்த கட்சியின் இரத்மலானை தொகுதியின் அமைப்பாளராகவும் பதவி வகித்து வருகிறார்.

ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று தனது 31ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.